2024 மே 26, ஞாயிற்றுக்கிழமை

நோபல் பரிசு வென்ற மருத்துவர் மரணம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 28 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் முதலாவது சிறுநீரகம் மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியரும் நோபல் பரிசை வென்றவருமான அமெரிக்காவின் புகழ்பெற்ற சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோசப் முர்ரேய், தனது 93ஆவது வயதில் காலமானார்.

கடந்த 1954ஆம் ஆண்டியில் ஆண்டில் முதலாவது சிறுநீரகம் மாற்று சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்த இவர், பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் உடற்கூறு ஆய்வுகளையும் நடத்தி இருக்கிறார். இதற்காக அவருக்கு 1990ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட டாக்டர் ஜோசப் முர்ரேய், ந் பாஸ்டன் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவருடைய இந்த கண்டுபிடிப்பான சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையின் மூலம் இன்று உலகம் முழுவதும் 6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .