2025 நவம்பர் 13, வியாழக்கிழமை

ஏலமிடப்பட்ட மைக்கேல் ஜெக்சனின் ஆடைகளை பொப் இசைப்பாடகி காகா கொள்வனவு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகப் புகழ்பெற்ற பொப் இசை மன்னன் மைக்கேல் ஜெக்சன், தனது வாழ்நாளில் அணிந்த உடைகள், இசை நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் என ஏராளமான பொருட்கள் பெவர்லி ஹில்ஸில் ஏலம் விடப்பட்டன.

இவற்றில் 55 பொருட்களை பிரபல பொப் இசைப்பாடகி காகா கொள்வனவு செய்துள்ளார். மேற்படி ஏலத்தை நடத்திய ஜூலியன்ஸ் ஏல நிறுவனம் அறிவித்துள்ளது.

தனது பாடலாலும், இசையாலும், நடனத்தாலும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களை ஈர்த்தவர் பொப் இசை மன்னன் மைக்கல் ஜெக்சன். கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மரணம் அடைந்தார்.

இந்நிலையிலேயே அவரது உடமைகள் ஏலம் விடப்பட்டுள்ளன. மைக்கேல் ஜெக்சனின் மேற்சட்டை ஒன்று 2 இலட்சத்து 40 ஆயிரம் டொலர்களுக்கு விற்பனையானது. வெள்ளை நிற கையுறை ஒரு இலட்சத்து 92 ஆயிரம் டொலருக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த நிதியில் ஒரு பகுதியை நலத்திட்ட உதவிகளுக்காக செலவிடவுள்ளதாக ஜூலியன்ஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X