2024 மே 15, புதன்கிழமை

ஹொஸ்னி முபாரக் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைத்தண்டனை அனுபவித்துவருகின்ற எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

84 வயதான ஹொஸ்னி முபாரக் சிறைச்சாலையிலுள்ள குளியறையில் விழுந்ததைத் தொடர்ந்து தலையில் ஏற்பட்டுள்ள வலியால் அவர் கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மாடி இராணுவ வைத்தியசாலையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜுன் மாதம் கோமா நிலைக்குள்ளான ஹொஸ்னி முபாரக் ஒரு மாதம் வைத்தியசாலையில் தங்கியிருந்தார்.

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதியான ஹொஸ்னி முபாரக் 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்படுவதை தடுப்பதற்கு தவறியமையால் ஆயுள்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

You May Also Like

  Comments - 0

  • zaam Wednesday, 02 January 2013 10:50 PM

    அடிவருடிகளுக்கு இது சரியான தன்டணை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .