2024 மே 15, புதன்கிழமை

உலகின் அதிக வயதான பெண்ணாக கருதப்பட்ட ஜப்பான் நாட்டு மூதாட்டி மரணம்

Kogilavani   / 2013 ஜனவரி 13 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் அதிக வயதான பெண் என்று கடந்த மாதம் கின்னஸ் உலக சாதனை புத்தக்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்ட ஜப்பான் நாட்டு மூதாட்டி  நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் தனது 115 ஆவது வயதில் ஜப்பான், கவாஸ்கார் நகரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

கோட்டோ ஒக்போ என்ற பெயரில் அழைக்கப்படும் இவர் 1897 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி ஜப்பானில் பிறந்துள்ளார்.
இவர் தனது மகனுடன் கவாசாக்கியில் உள்ள அதே மருத்தவமனையில் வசித்து வந்துள்ளார்.

உலகின் அதிக வயதான பெண்ணாக கருதப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த டினா மான்ஃப்ரெடினி கடந்த மாதம் 12 ஆம் திகதி தனது 115 வயதில் உயிரிழிந்த நிலையில் அவருக்கு பின் உலகின் அதிக வயதான பெண்ணாக கோட்டோ ஒக்போ கடந்த மாதம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இவர் உடல்நலக் குறைப்பாடு காரணமாக நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவருக்குப்பின் உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமை, மத்திய ஜப்பானில் உள்ள கியோட்டோ பகுதியில் வாழ்ந்து வரும் ஜிரோமன் கிமுரா (115 வயது) என்பவரை சென்றடைந்துள்ளது.

இவர் 1897 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி பிறந்துள்ளார். கோட்டோ ஒக்போவை விட ஏழு மாதங்களுக்கு மூத்தவர் என்பது குறிப்பிடத்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .