2024 மே 14, செவ்வாய்க்கிழமை

காதலியைச் சுட்டுக் கொன்றார் ஒஸ்கர் பிஸ்டோரியஸ்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக் மற்றும் பராஒலிம்பிக் ஓட்ட வீரரான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒஸ்கர் பிஸ்டோரியஸ் தனது காதலியைச் சுட்டுக் கொன்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் பிறீடோரியா பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது இரண்டு கால்களும் இல்லாத நிலையில் தகடுகளின் உதவியுடன் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றும் ஒஸ்கர் பிஸ்டோரியஸ், உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் பங்குகொள்ளும் பராஒலிம்பிக் போட்டிகளில் மாத்திரமன்றி, சாதாரண வீரர்கள் பங்குகொள்ளும் ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்குபற்றி உலகப்புகழ் பெற்றவர்.

இந்நிலையில் தென்னாபிரிக்காவிலுள்ள பிறீடோரியா பகுதியில் வீட்டில் வைத்துத் தனது காதலியைச் சுட்டுக் கொன்றுள்ளதாக 26 வயதான ஒஸ்கர் பிஸ்டோரியஸ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

30 வயதான அவரது காதலியான றீவா ஸ்டீன்கம்ப் என்ற மொடல் நடிகையே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகத் தெரிவித்துள்ள தென்னாபிரிக்க காவல்துறை, மேலதிக விபரங்களை தற்போதைய நிலையில் வெளிப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .