2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

இயக்குநராக அவதாரம் எடுக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 25 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒஸ்கார் விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் - தமிழர் என்ற பெருமைக்குரிய ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். விரைவில் அவர் ஒரு திரைப்படத்தை இயக்கப் போகிறாராம்.

நீண்ட நாட்களாக ஒரு கதையை எழுதி வருவதாகவும், விரைவில் அதை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. திரைப்படத்தை இயக்குவது குறித்து தனது நண்பரான ரசூல் பூக்குட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

இதுகுறித்து ரசூல் பூக்குட்டி கூறும்போது, 'ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும்போதே ஒரு திரைப்படத்திற்காக கதையை எழுதி முடித்துள்ளார். இந்த கதையை நானும் ஏ.ஆர்.ரஹ்மானும் பலமுறை கலந்து பேசியுள்ளோம். விரைவில் திரைப்படத்துக்கான பணிகளை ஆரம்பிக்க உள்ளோம். இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு பல்வேறு நடிகர், நடிகையர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது' என்றார்.

உலக சினிமா பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ரஹ்மான். தான் இசையமைக்கும் திரைப்படத்தின் கதையில் கூட அவர் மிகுந்த கவனம் செலுத்துவது வழக்கம். தனக்கு நெருக்கமான இயக்குநர்களிடம் அவர்களின் கதைகளில் தேவையான மாறுதல்களையும் அவர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .