2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

நடிகர் டெல்லி கணேஷுக்கு மாரடைப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

62 வயதான நடிகர் டெல்லி கணேஷ் நேற்று புதன்கிழமை இரவு திடீரென மாரடைப்பால் அவதிப்பட்ட நிலையில் அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரது உடல்நிலை தேறிவருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடக நடிகராக இருந்து திரைப்பட நடிகராக உயர்ந்தவர் டெல்லி கணேஷ். ஆரம்பத்தில் நாயகனாக நடித்துவந்த இவர் பின்னர் குணச்சித்திரம், வில்லத்தனம், காமெடி ஆகிய பாத்திரங்களிலும்; நடித்துவந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .