2024 மே 15, புதன்கிழமை

நெல்சன் மண்டேலா மீண்டும் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 28 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் நுரையீரல் தொற்றுக்கு மீண்டும் உள்ளாகியுள்ள நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

94 வயதான நெல்சன் மண்டேலா நேற்று புதன்கிழமை இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்க ஜனாதிபதியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

நுரையீரல் தொற்று மற்றும் பித்தப்பைகல் காரணமாக கடந்த டிசெம்பர் மாதம் 18 நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து நெல்சன் மண்டேலா சிகிச்சை பெற்றிருந்தார். 

தென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பு இன ஜனாதிபதியாக தெரிவான நெல்சன் மண்டேலா,  1994ஆம் ஆண்டு முதல்  1999ஆம் ஆண்டுவரை பதவி வகித்திருந்தார்.  இவருக்கு 1993ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசும் கிடைத்தது. 

நெல்சன் மண்டேலா இரண்டு தசாப்தங்களை சிறையிலும் கழித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .