2024 மே 14, செவ்வாய்க்கிழமை

சிறைகைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட பாப்பரசர்

Kogilavani   / 2013 மார்ச் 29 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் ரோமில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இரண்டு பெண்கள் உட்பட 12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவியுள்ளதுடன் முத்தமிட்டு ஆசிர்வாதம் செய்துள்ளார்.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரோமில் ஏற்பாடு செய்யபட்ட புனித வியாழன் பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்ட பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அங்கு கெஸல் டீல் மரம்மோ சிறைச்சாலையில் உள்ள சிறைகைதிகளை இவ்வாறு ஆசிர்வதித்துள்ளார்.

இச் சிறைகைதிகளில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களும் இரண்டு பெண்கள் உள்ளடங்கியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

'ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்' என இதன்போது பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 'நான் இதனை இதயபூர்வமாக செய்கிறேன். ஏனெனில் ஒரு இதுவும் எனது கடமை. நான் உங்களுக்கு சேவை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். நான் இதனை விரும்புகிறேன். ஏனெனில் இதையே எனக்கு கடவுள் கற்றுகொடுத்துள்ளார்' எனவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது பலர் கண்ணீர்விட்டதாக வத்திகான் பேச்சாளர் பெட்ரிகோ லொமபாரட்டி தெரிவித்துள்ளார்.





You May Also Like

  Comments - 0

  • khan Sunday, 31 March 2013 10:10 AM

    இது ரொம்ப ஒவர்

    Reply : 0       0

    amr Monday, 01 April 2013 05:32 AM

    காலைக் கழுவுகிறீர்கள், சிலையை வணங்குகிறீர்கள் - இவை பகுத்தறிவுக்கு முட்டாள்த்தனமாகப் படவில்லையா?

    Reply : 0       0

    ramesh Monday, 08 April 2013 01:02 PM

    இவர் இவ்வள‌வு செய்ராரே ஆனால் நீங்கள் செய்வீர்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .