2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

நடிகர் சஞ்சய்தத் நீதிமன்றில் சரண்

Kanagaraj   / 2013 மே 16 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சஞ்சய்தத் நீதிமன்றில் இன்று பிற்பகல் சரணடைந்துள்ளார். மும்பை தடா நீதிமன்றத்திலேயே அவர் சரணடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் பலியானார்கள். 700 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் 9 எம்.எம். பிஸ்டல், ஏ.கே. 56 ரக துப்பாக்கிகள், வெடிமருந்து பொருட்கள் பதுக்கியதாக நடிகர் சஞ்சய்தத் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மும்பை தடா நீதிமன்றம் சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உதவியுடன் தாவூத் இப்ராகிம் கும்பல் இந்த குண்டு வெடிப்பை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மும்பை குற்றவாளியான யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நடிகர் சஞ்சய்தத்திற்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த சிறை தண்டனையை எதிர்த்து சஞ்சய்தத் டில்லி உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை 5 ஆண்டாக குறைத்தது. அவர் மும்பை தடா நீதிமன்றில் சரண் அடைய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சஞ்சய்தத் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு இருந்ததால் அவருக்கு நீதிமன்றில் சரண் அடைய நேற்று வரை அவகாசம் அளித்தது.

இந்நிலையில் அவகாசத்தை மேலும் நீடிக்க கோரி அவரது சட்டத்தரணிகள் மனுக்களை தாக்கல் செய்தனர் அந்த மனுக்களை உயர் நீதிமன்று தள்ளுபடி செய்தது.

இதையடுத்து நடிகர் சஞ்சய்தத் இன்று வியாழக்கிழமை மதியம் 1.30 மணியளவில் அவரது வீட்டிலிருந்து புறப்பட்டார். 2.30 மணியளவில் நீதிமன்ற வளாகத்தை சென்றடைந்தார். அதன்பின், நீதிபதிகள் முன் ஆஜரான அவர் முறைப்படி நீதிமன்றில் சரணடைவதாக தெரிவித்தார்.

சஞ்சய்தத் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து இருந்ததால் தெற்கு மும்பையில் உள்ள தடா நீதிமன்றில் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

சஞ்சய்தத் ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து பிணையில் விடுதலையானார். எனவே அவர் மீதமிருக்கின்ற மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X