2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

மௌஸைக் கண்டுபிடித்தவர் காலமானார்

Kogilavani   / 2013 ஜூலை 04 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணினிக்கான மௌஸைக் கண்டுபிடித்தவரான அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர் டக்ளஸ் எங்கெல்பார்ட் காலமானார்.

வீடியோ கான்ஃபரன்ஸிங் எனப்படும் காணொளி தொடர்பாடலையும் கண்டுபிடித்திருந்த இவர், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தனது 88 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

மின்னஞ்சல், இணையம் போன்றவை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே இப்படியான வசதிகள் வரும் என்று இவர் கணித்து கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1968ஆம் ஆண்டு கணினி விஞ்ஞானிகள் ஆயிரம் பேர் முன்னிலையில் உரையாற்றியதில் பிரபலமானவர் டக்ளஸ் எங்கெல்பார்ட் ஆவார்.

அவரது அந்த உரை பெரும் உற்சாகத்தையும் வரவேற்பையும் பெற்றிருந்தது.

கணினியில் பயன்படுத்தப்படுகின்ற மௌஸ் எனப்படும் சுட்டுக் கருவியை உலகிற்கு முதன் முதலாக அறிமுகம் செய்ததோடு, ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு இடத்துடன் காணொலி இணைப்புடன் கூடிய தொடர்பாடல் வலயமைப்பையும் அவர் செயல்படுத்திக் காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது..

தனது இந்தக் கண்டுபிடிப்புகளால் அவர் செல்வந்தர் ஆகவில்லை. மௌஸுக்கு இவர் பெற்றிருந்த அறிவுசார் காப்பீட்டு உரிமையின் காலம் முடிந்த பின்னர்தான், நாம் அன்றாடம் கணினியில் பயன்படுத்தும் ஒரு கருவியாக அது உருவெடுத்திருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X