2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

இயற்கை மாறாக உறவு; கணவருக்கு எதிராக யுக்தாமுகி முறைப்பாடு

Menaka Mookandi   / 2013 ஜூலை 14 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


இயற்கைக்கு மாறாக உறவுகொள்ள வற்புறுத்தி துன்புறுத்துகிறார் என்று கூறி தன் கணவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் நடிகை யுக்தா முகி.

1999இல் உலக அழகி பட்டம் வென்றதை அடுத்து பல இந்தி திரைப்படங்களில் நடித்தவர் யுக்தா முகி. தமிழில் அஜீத்துடன் 'பூவலெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நியூயோர்க்கைச் சேர்ந்த தொழிலதிபரும், நிதி ஆலோசகருமான பிரின்ஸ் டுலி என்பவரை அவர் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்லானார்.

இப்போது கணவருக்கு எதிராக மும்பை அம்போலி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். தன் கணவர் பிரின்ஸ் தன்னை அடிக்கடி அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் யுக்தா முகி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், கொடுமை மற்றும் துன்புறுத்துதல், இயற்கைக்கு மாறான உறவு கொள்ளுதல் ஆகிய சட்டப் பிரிவுகளில் பிரின்ஸ் டுலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. முறைப்பாடு செய்த யுக்தா முகிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. டுலி மீது ஏற்கனவே அம்போலி பொலிஸ் நிலையத்தில் யுக்தா முகி புகார்கள் அளித்திருந்தார்.

ஆனால், தண்டிக்க இயலாத குற்றத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ததால், நீதிமன்ற உத்தரவின்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது முதல் முறையாக டுலி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .