2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இங்கிலாந்து ராணிக்கு நிதி நெருக்கடி

Kogilavani   / 2014 ஜனவரி 30 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கையிருப்பு பணம் வரலாறு காணாத அளவுக்கு குறைவடைந்துள்ளதாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பொது கணக்கு குழு, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.

இவர் தாரளமாக செலவு செய்வதால் இந்த நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவ் அறிக்கை தெரிவித்துள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத்திடம் கடந்த 2001ஆம் ஆண்டில் 35 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்  இருந்துள்ளது. ஆனால் தற்போது அவரிடம் வெறும் 1 மில்லியன் பவுண்  மட்டுமே உள்ளதாக அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

ராணியின் ஆலோசகர்கள் நிதியை முறையாக கையாளவில்லை என்றும், சிக்கன நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள தவறிவிட்டனர் என்றும் பொது கணக்கு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ குடும்பம் கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 5 சதவீதம் மட்டுமே சேமித்துள்ளது.

இதனால், ராஜ குடும்பத்தினர் தங்கள் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்கரெட் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ராணியின் அரண்மனைகள் இடியும் நிலையில் காணப்படுவதாகவும் ஆனால், அதை புனரமைக்காமல் இப்படி ராஜ குடும்பத்தினர் தாறுமாறாக செலவு செய்கிறார்கள் என்று இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X