2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அதிககாலம் வாழ்ந்த கிரிக்கெட் வீரர் காலமானார்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் கூடுதலான காலம் உயிர் வாழ்ந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் நோர்மன் கோர்டன் தனது 103ஆவது வயதில் காலமாகியுள்ளார். 100 வயது வரை வாழ்ந்த முதலாவது கிரிக்கெட் வீரர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தென் ஆபிரிக்கா அணியின் வேகப் பந்துவீச்சாளரான இவர் 6 மாதங்களில் தென் ஆபிரிக்கா அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற 5 போட்டிகள் அடங்கிய ஒரு டெஸ்ட் தொடர் மாத்திரமே இவர் விளையாடிய சர்வதேசப் போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளில் 20 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் கோடன். 16 வருடங்களில் கோர்டன் 29 முதற் தரப்போட்டிகளில் விளையாடி 126 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
 
உலக மகா யுத்தம் காரணமாகவே இவரின் கிரிக்கெட் வாழ்வு குறுகிய காலத்தில் நிறைவுக்கு வந்ததாக கூறப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .