2024 மே 14, செவ்வாய்க்கிழமை

3 குழந்தைகளுக்கும் மைக்கெல் ஜெக்சன் தந்தை இல்லையாம்

Menaka Mookandi   / 2013 மே 08 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொப் இசை உலகின் சாதனைப் பாடகர் மைக்கெல் ஜெக்சன், அவரது குழந்தைகளுக்கு தந்தை இல்லை ல்ல என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அமெரிக்க பொப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனுக்கு, தன் குடும்பம் மிக உயர்ந்த அளவில் இருக்க வேண்டும் என்பதில், ஆழ்ந்த விருப்பம் இருந்ததாம்.

தன் குழந்தைகள் மிகவும் அறிவாளிகளாக, புத்திக்கூர்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதும் ஜெக்சனின் தீராத ஆசையாம். அதற்காக அவர் சிந்தித்த போது உதித்ததுதான் இந்த வாடகைத்தாய், செயற்கை கருவூட்டல் யோசனையாம்.

செயற்கை கருவூட்டல்...
தன் மனைவியின் விருப்பத்துடன், அவரது கர்ப்பப் பையில், செயற்கை கருவூட்டல் மூலம், அறிவில் சிறந்த அறிஞர்களின் உயிரணுக்களை செலுத்தி, தன் குழந்தைகளை அவர் பெற்றெடுத்தாராம்.

வாடகைத்தாய்...
அவர்கள் தான், பிரின்ஸ் மைக்கேல், பாரிஸ் மற்றும் பிளாங்கெட். இதில், பிரின்ஸ், பாரிஸ் ஆகியோரை, ஜெக்சனின் மனைவி டெபி ரோவே பெற்றெடுத்தார். ஆனால், பிளாங்கெட், மற்றொரு வாடகைத் தாய் மூலம் பிறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நான் தான் அப்பா...
அந்த வாடகைத் தாய்க்கு, தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஜெக்சன் தான் தந்தையாக இருக்கப் போகிறார் என்பதும் தெரியாது. இது குறித்து, பிரிட்டிஷ் நடிகர் மார்க் லெசர், 'ஜெக்சனின் மூன்று குழந்தைகளுக்கும் நான் தான் தந்தை' என்று கூறியுள்ளார்.

உண்மை அப்பா இல்லையாம்...
மூன்று குழந்தைகளுக்கும், மைக்கெல் ஜெக்சன் தந்தையைப் போல் தோன்றினாலும், மருத்துவ ரீதியாக, அவரது குழந்தைகளுக்கு அவர் தந்தை அல்ல என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
புத்திசாலியா இருக்க...
தன் குழந்தைகள், அறிவாளிகளின் உயிரணுவிலிருந்து தான் வர வேண்டும் என்ற தீராத விருப்பமே, ஜெக்சனின் இந்த முடிவுக்கு காரணமாம்.


You May Also Like

  Comments - 0

  • amr Friday, 10 May 2013 03:53 AM

    இவனைப்போன்ற படு சுத்த மடையர்கள் இன்னும் எத்தனைபேர் உலகில் உள்ளனர்..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .