2024 மே 14, செவ்வாய்க்கிழமை

5 ஆண்டு சிறை உறுதி; சஞ்சய் தத்தின் மறுபரிசீலனை மனு நிராகரிப்பு

Menaka Mookandi   / 2013 மே 10 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

1993ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது.

இதன்படி, நடிகர் சஞ்சய் தத், எதிர்வரும் 15ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி மூன்றரை ஆண்டு கால சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது.

குண்டு வெடிப்பு வழக்கில், தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் தத் உட்பட 6 பேர் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்திருந்தனர். அனைவரது மனுவையும் உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

1993ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில், சட்டத்துக்கு விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்துக்காக சஞ்சய் தத்துக்கு ஐந்தரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், தண்டனையை உறுதி செய்தனர். விசாரணையின் போது ஒன்றரை ஆண்டுகாலம், சிறையில் இருந்தது போக மீதம் மூன்றரை ஆண்டுகள் அவர் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராக சஞ்சய் தத் கால அவகாசம் கோரியிருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 15ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X