2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

70 வயதில் ஆறாவது திருமணம் செய்யும் தென்னாபிரிக்க ஜனாதிபதி

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 17 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென்னாரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா தனது 70ஆவது வயதில் ஆறாவது சட்டபூர்வ திருமண பந்தத்தில் இணையவிருக்கிறார். கடந்தவாரம் தனது 70ஆவது பிறந்தநாளினை தனது தற்போதைய மூன்று மனைவிகளுடனும் கொண்டாடியிருந்தார். தென்னாபிரிக்காவின் சூலு பழங்குடியினரின் வழிவந்த ஜனாதிபதியே ஜேக்கப் சூமா. இவர்களது வழக்கப்படி ஒருவர் எத்தனை திருமணமும் செய்துகொள்ளலாம். அதற்கிணங்க ஏற்கனவே 5 முறை சட்டப்படி திருமணம் செய்துள்ளார் ஜேக்கப் சூமா.

தற்போதைய தென்னாபிரிக்காவின் உள்துறை அமைச்சராகவிருக்கின்ற டலாமினி என்பவரை 1998ஆம் ஆண்டு விவாகரத்து செய்திருந்தார் ஜேக்கப். மற்றுமொரு மனைவியான கரே என்பவர் 2000ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார். தற்பொழுது சிஷாகெலி குமாலே, நொம்புமேலோ நியூரிலி, தொபேகா மபிஜா ஆகிய மூன்று மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். 70வயதான தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமோவிற்கு 21 குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் குளோரியா போங்கேகிலி என்ஜிமா என்பவரை அடுத்த வாரம் ஆறாவது முறையாக திருமணம் செய்து கொள்ளவுள்ளார். குளோரியா போங்கேகிலி என்ஜிமாவுடன் திருமணம் செய்துகொள்ளாமேலே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறார் ஜேக்கப். இவர்களுக்கு இரண்டரை வயதில் குழந்தையும் இருக்கிறது. கடந்த வருடம் ஜி20 மாநாட்டுக்கும் இந்தப் பெண்ணுடன்தான் உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டிருந்தார் தென்னாபிரிக்க ஜனாதிபதி. இந்நிலையில்தான் இவர்களது உத்தியோகபூர்வ திருமணம் நடைபெறவிருக்கிறது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .