2025 மே 14, புதன்கிழமை

ஒருதொன் நிறையுடைய வானை கயிற்றினால் கட்டி இழுத்த 7 வயது சிறுவன்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


சீனாவைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன் ஒரு தொன் நிறையுடைய வானை கயிற்றினால் கட்டி இழுத்துச் சென்று பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளான். 

இச்சிறுவன் குறித்த வானை பயணிகள் சகிதம் இழுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் அனுஹி மாகாணத்தைச் சேர்ந்த யெங் என்ற சிறுவனே இவ்வாறு அபார திறமையுடன் விளங்குகின்றான்.

50 கிலோகிராம் நிறையுடைய மேற்படி சிறுவன் மேலும் வளர்ந்து வரும் நிலையில் தனது தசைகளை கட்டமைத்து கொள்வதற்காக 40கிலோகிராம் தானிய பைகளை தினம் சுமந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றான்.

இதேவேளை  திறமையை அயலவர்களும் அறிந்துக்கொள்வதற்காக தனது 90 கிலோகிராம் நிறையுடைய தந்தையை முதுகில் சுமந்து நடந்துள்ளான்.

ஒலிம்பிக் விளையாட்டின் போது பளுதூக்கும் போட்டியில் சம்பியன் ஆகவேண்டும் என்பதே மேற்படி சிறுவனின் கனவாக உள்ளது.

இச்சிறுவன் பிறந்து 9 மாதமாக இருக்கும்போதே 5 கிலோகிராம் நிறையுடைய எண்ணை பரலை தூக்கி தனது திறமையை முதன்முதலாக
வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

'இவனது அபார திறமையை கண்டு நாங்கள் திகைத்துவிட்டோம்' என இச்சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.

இவன், ஒவ்வொரு உணவு வேளைகளின் போதும் மூன்று கோப்பை சோறு அல்லது நூடில்ஸை உணவாக உட்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி சிறுவனின் சகோதரர்களான கியோலினோ மற்றும் கிலிவ்டி ஸ்டோர் ஆகியோர் இரண்டு வயதாக இருக்கும்போதே பளுதூக்கும் செயற்பாட்டை ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது 7 மற்றும் 5 வயதுடைய இவர்கள் கின்னஸ் சாதனைகளையும் புரிந்துள்ளனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X