2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இரு சிறுவர்களுடன் பாலியல் உறவுகொண்ட பெண் 7 வருட தண்டனையை எதிர்நோக்குகிறார்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மகளின் நண்பர்களான பாடசாலை மாணவர்கள் இருவருடன் பாலியல் உறவு கொண்ட நான்கு பிள்ளைகளின் தாயொருவர் 7 வருட சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த கெலி பெக்கர் என்ற 35 வயதுடைய பெண்ணே மதுபோதையில்  14 மற்றும் 16 வயது சிறுவர்களுடன் இவ்வாறான நடத்தையில் ஈடுபட்டுள்ளார்.

சர்ரே பிராந்தியத்தின் டட்வேர்த் நகரில் உள்ள கெல்லி பெக்கரின் வீட்டுக்கு விருந்தொன்றுக்காக 10 சிறுவர்கள் பெக்கரின் மூத்த மகளினால் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது பெக்கர் 3 போத்தல் வைன்களை அருந்தியதுடன் அவர்களில் 16 வயதான ஒரு சிறுவனுடன் சமயலறையில் நடனமாடியுள்ளார். அதன்பின் அச் சிறுவனுடன் பெக்கர் பாலியல் உறவு கொண்டுள்ளார்.

இதன்பின்  பின் 14 வயதானதொரு  சிறுவனும் அவர்களுடன் இணைந்ததாக தெரிவிக்கப்படடுள்ளது.

14 வயது சிறுவனுடன் பாலியல் நடத்தையில் ஈடடுபட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றில் கெல்லி பெக்கர்  ஆஜர்படுத்தப்பட்டார்.

தன்மீதான குற்றச்சாட்டுகளை கெல்லி பெக்கர் ஒப்புக்கொண்டார். அதையடுத்து அவர் 7 வருட சிறைத்தண்டனையை எதிர்கொள்வதாக நீதிபதி எச்சரித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .