2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஓவிய மாணவர்களுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்த 84 வயது சீன முதியவர்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 12 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவைச் சேர்ந்தவர் லீ ஜன் என்ற 84 வயதான முதியவர் கலை ஆர்வம் கொண்டவர்.

இதனால் பொழுதுபோக்கிற்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் மொடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், செங்டு நகரில் உள்ள ஓவிய மாணவர்களுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார் லீ ஜன்.

சுற்றி நின்ற மாணவர்களுக்கு மத்தியில் எந்தவித பதற்றமும் இன்றி, படம் வரைய ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

வகுப்பறையில் மாணவர்களுடன் அதிகமாக பேசுவதில்லை. அவர்களின் ஓவியத்தை பார்ப்பதையே அதிகம் விரும்பினார்.

வகுப்பறையில் கலையார்வத்துடன் கூடிய அவரது பங்களிப்பை மாணவர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

இவ்வாறு நிர்வாணமாக போஸ் கொடுக்கும் ஒவ்வொரு வகுப்புக்கும் 15.81 அமெரிக்க டாலர் ஊதியமாக பெற்றுள்ளார்.

இந்த தள்ளாத வயதில் உனக்கு ஏன் இந்த ஆசை? என்று கேட்கலாம். அதனால்தான் தனது பிள்ளைகளிடம் கூட இதைத் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளார் லீ ஜான்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .