2025 மே 14, புதன்கிழமை

கைகளால் 'நடந்து' பாடசாலை செல்லும் 10 வயது சிறுவன்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 21 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவைச் சேர்ந்த பத்து வயது சிறுவன் ஒருவன் கடந்த நான்கு வருடங்களாக கைகளால் பாடசாலைக்கு நடந்து சென்று வருகின்றார்.

சீனாவின் ஹுபாய் மாகாணத்தைச் சேர்ந்த யான் யோங் என்ற சிறுவனே இவ்வாறு கைகளால் நடந்து செல்லும் விபரீத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இவருக்கு குழந்தை பருவத்தில் ஏற்பட்ட நோய் பக்கவாதத்தை தோற்றுவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் தவழ்ந்து அனைத்தையும் பெற்றுக்கொண்ட இவர் நான்கு வயதிலிருந்து கைகளால் நடக்க ஆரம்பித்துள்ளார்.

யான் தனது வகுப்பு மாணவர்களைவிட நேரத்துடன் பாடசாலைக்கு சென்றுவிடுவதுடன் தனது பயணத்திற்காக ஒன்றரை மணித்தியாலங்களையே எடுத்துக்கொளவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரால் ஊன்றுகோலின் உதவியுடன் நடக்க முடியும். ஆனால் கைகளால் மிக வேகமாக நடக்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

யானின் தந்தையும் மாற்றுதிறனாளியாகவே காணப்படுகின்றார். ஆனாலும் யான் தனது கல்வியை நிறைவு செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

'நான் அமைதியாக இருக்க வேண்டியதில்லை. எதிர்கால என் வாழ்க்கைக்காக நான் கடினமாக கல்வி கற்க வேண்டும்' என்று யான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X