2025 மே 14, புதன்கிழமை

மாலைதீவில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான 16 வயது சிறுமிக்கு 100 கசையடிகள் தீர்ப்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 04 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

29 வயது நபருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக 16 வயது சிறுமியொருவருக்கு 100 கசையடிகளும் 6 மாத கால வீட்டு காவல் தண்டனையும் விதித்து மாலைதீவு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

மேற்படி சிறுமி 29 வயது நபருடன் பாலியல் தொடர்பை வைத்திருந்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளை, வயது வராத சிறுமியுடன் பாலியல் தொடர்பை வைத்திருந்த குற்றத்திற்காக மேற்படி இளைஞருக்கும் 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மாலைதீவு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சிறுமி சட்ட ரீதியாக இன்னும் சிறு பராயத்திலே உள்ளதால் அவர் 18 வயதை அடையும் போதே தண்டனை அமுல்படுத்தப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக  அப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X