2025 மே 14, புதன்கிழமை

காப்புறுதி பணத்திற்காக 10ஆவது கணவரை சுட்டு கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

Kogilavani   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெக்சாஸில் ரூ.9,699,364 இன்சுரன்ஸ் பணத்திற்கு ஆசைபட்டு தனது பத்தாவது கணவரை சுட்டுக் கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

டெக்சாஸைச் சேர்ந்த 19 வயது மகனின் தாயான ஷேரன் மேக்ஸ்வெல்(44) என்பவரே இத்தகைய தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

ஏற்கனவே 9 பேரை விவாகரத்து செய்த ஷேரன், கோர்டன் மேக்ஸ்வெல்(46) என்பவரை அண்மையில் திருமணம் செய்தார். திருமணமாகி 5 மாதங்கள் கூட முடியாத நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கோர்டன் படுகொலை செய்யப்பட்டார். ஷேரன் தனது கணவர் பெயரில் உள்ள ரூ.9,699,364 காப்புறுதி பணத்திற்கு ஆசைபட்டு அவரது தலையில் 4 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பிறகு அவரது உடலை டிரக் வண்டியில் வைத்து எரித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் இப்பெண்ணின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

9 முறை விவாகரத்தான ஷேரன் தனது கணவர் பெயரில் இருந்த ரூ.9,699,364 காப்புறுதி பணத்திற்கு ஆசைபட்டு அவரைக் கொன்றுவிட்டார். ஷேரனுக்கும் வேறு ஒருவருக்கும் இடையே உறவு இருப்பதை கண்டுபிடித்த கோர்டன் தனது மனைவியைவிட்டு பிரிய திட்டமிட்டார் என்று வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் கூறினார்.

கோர்டன் 'தனது மனைவி 357 துப்பாக்கியை பயன்படுத்துவதில் வல்லவர்' என்று நண்பர்களிடம் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷேரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.553,747.25 அபராதமும் விதித்துடன் வரும் 2042 வரை அவருக்கு பிணை கொடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. (தட்ஸ்தமிழ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X