Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 செப்டெம்பர் 21 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவைச் சேர்ந்த 27 வயதான யுவதியொருவர் கடந்த 16 வருடங்களாக கூடையொன்றிற்குள் வசித்து வருகின்றார்.
சீனாவின் வட பிராந்தியமான சாங்க்ஸி மாகாணத்தைச் சேர்ந்த மோ ஹோங்பிங் என்ற பெண்ணே தனது 11 வயதிலிருந்து 1.2 மீற்றர் நீளமும், 0.5 அகலமும் கொண்ட கூடைக்குள் வாழ்ந்து வருகின்றார்.
இது குறித்து அப்பெண்ணின் தாயான வெங் ஸியா தெரிவிக்கையில்,
'மோ பிறந்து 20 நாட்களுக்குள் கடுமையான காய்ச்சலினால் பாதிக்கப்பட்டார். நாம் வசித்த இடம் மலைப்பகுதி. அது குளிர்காலமாகையால் வீதிகள் பனியினால் மூடப்பட்டுக் கிடந்தது. இதனால் மோவை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முடியவில்லை.
இறுதியாக மோவை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது வைத்தியர்கள் மோவிற்கு தண்டு மூளை சவ்வு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மோ காப்பாற்றப்பட்டாலும் அவரது வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது.
ஒரு இளையுதிர் காலத்தின்போது மோவை கூடையொன்றிற்குள் வைத்தோம். அப்போது ஆச்சர்யமாக மோ மிகவும் சந்தோசமாகக் காணப்பட்டார்.
கூடையானது மோவின் உடலிற்கு வசதியாக அமையுமமென நாங்கள் கண்டறிந்தோம். அப்போதிருந்து அவர் கூடையிலேயே வசித்து வருகிறார்' எனத் தெரிவித்துள்ளார்.
1 hours ago
5 hours ago
8 hours ago
9 hours ago
meenavan Thursday, 22 September 2011 02:44 PM
இறைவனின் வல்லமைக்கு இன்னுமொரு அத்தாட்சி,பதினாறு வருடங்களாக கூடையில் வைத்து பராமரிக்கும் தாயின் பாசத்தை எவ்வாறு போற்றுவது? இறைவா உனக்கே புகழனைத்தும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago
9 hours ago