2025 மே 14, புதன்கிழமை

விவேக பரீட்சையில் 162 புள்ளிகளை பெற்று புகழ் பெற்ற அறிஞர்களையும் விஞ்சிய சிறுமி

Kogilavani   / 2012 ஒக்டோபர் 04 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


விவேக பரீட்சையொன்றில் 162 புள்ளிகளை பெற்று பாடசாலை சிறுமியொருவர் விஞ்ஞானியான அல்பர்ட் ஜன்ஸ்ரீன் மற்றும் பேராசிரியர் ஸ்டீபன் ஹோக்கிங் ஆகியோரையும் விஞ்சிய மூளைசாலி என்ற பெயரை பெற்றுக்கொண்டுள்ளதுடன் மென்சாவிலும் அங்கத்துவம் பெற்றுள்ளார்.

உலகில் அதிகூடிய மற்றும் பழமை வாய்ந்த விவேக திறனாளிகளை கொண்ட உலக மூளை வலையமைப்பு என்று அழைக்கப்படும் மென்சாவில் மேற்படி சிறுமி இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

லண்டனின் லிவர்பூல் பகுதியை சேர்ந்த ஒலிவியான் மெனிங் என்ற 12 வயது சிறுமியே இவ்வாறான அதி திறமைசாலியாக விளங்குகிறார்.

இவர், விவேக பரீட்சையில் ஜேர்மனைச் சேர்ந்த ஜன்ஸ்ரின்  மற்றும் பேராசிரியர் ஸ்டீபன் ஹோகிங் ஆகியோரையும் விட இரண்டு புள்ளிகளை
அதிகமாக பெற்று உலகிலே மிகச் சிறந்த விவேகிகள் வலையமைப்பில் சேர்ந்துள்ளார்.

 'பலர் என்னிடம் வந்து அவர்களது கற்கை நெறி சார்ந்த வீட்டு வேலைகளை செய்வதற்கு உதவுமாறு கேட்கின்றனர். எனக்கு சவால்கள் என்றால் அதிகம் பிடிக்கும் என மேற்படி சிறுமி தெரிவித்துள்ளார்.

'நாங்கள் அதிகான வேலைகளை செய்யும்படி அவளிடம் ஒப்படைப்போம். ஏன் அவள் அனைத்து  புள்ளிகளையும் பெற்றுக்கொள்ளவில்லையென கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும்' என ஆசிரியரான ஸ்டேசி மெய்ன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • Rajesh Thursday, 04 October 2012 02:36 PM

    இவர் விஞ்ஞானி அல்பேட் ஐயின்ஸ்டினின் மறு பிறவியாக இருக்கலாம்.முன்னைய பிறவில் கற்ற கல்வி மிகவிரைவாக அடுத்த பிறவியில் கற்று தேர்ச்சி பெற முடிந்தது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X