2025 மே 14, புதன்கிழமை

குப்பை தொட்டிகளிலிருந்து 30 குழந்தைகளை எடுத்து வளர்த்த மூதாட்டி

Kogilavani   / 2012 ஜூலை 31 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


சீனாவைச் சேர்ந்த, குப்பைகளை சேகரிக்கும் மூதாட்டியொருவர் இதுவரை குப்பைத் தொட்டிக்குள் தூக்கியெறிப்பட்டு அநாதரவாக்கப்பட்ட 30 குழந்தைகளை எடுத்து பராமரித்து வரும் செயற்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டுவருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில் கிழக்கு பிராந்தியமான செய்ஜிங் மாகாணத்தை சேர்ந்த லூ க்யோங் என்ற 88 வயது மூதாட்டியே இச்செயற்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறார்.

தற்போது சிறுநீரக கோளாரினால் பாதிக்கப்பட்டுள்ள இப்பெண், குப்பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தி பெறும் வருமானத்தின் மூலம் இக்குழந்தைகளை பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் லீ சின், 17 வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார்.

தனக்கு 82 வயதாக  இருக்கும்போது இளைய குழந்தையான சாங் கிலினை தொட்டியொன்றினுள்ளிருந்து எடுத்து வளர்க்கத் தொடங்கினார். அக்குழந்தைக்கு தற்போது 7 வயதாகிறது.

தற்போது, அநாதராவாக்கப்பட்ட நிலையில் கிடைக்கப்பெற்ற குழந்தைகளில் நான்கை மட்டும் வைத்துக்கொண்டு ஏனையவற்றை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

''எப்போதோ நான் முதுமை நிலையை அடைந்துவிட்டேன். எப்போதும் என்னால் அந்த குழந்தையை அலட்சியப்படுத்தவோ அல்லது குப்பைத் தொட்டிக்குள் கிடந்த நிலையில் மரணமடைவதை பார்த்துக்கொண்டிருக்கவோ முடியவில்லை. அக்குழந்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் எதையோ எதிர்பார்த்த நிலையிலும் இருந்தது. நான் அதனை என்னுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்' என அப்பெண் தெரிவித்துள்ளார்.

'எனது வீடு கிராமபுரங்களில் உள்ள சிறியளவிலான வீடு. நான் அக்குழந்தையை எடுத்து வந்து பராமரித்ததுடன் தேவைக்கேற்ப மருத்துவ தாதியாகவும் செயற்பட்டேன். தற்போது அச்சிறுவன் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் காணப்படுகிறான்.
எனது ஏனைய பிள்ளைகள் சாங் கிலினுக்கு மிகவும் உதவுபவர்களாக இருக்கின்றனர். எங்கள் அனைவருக்கும் சாங்க் கிலின் விசேடமானவன்.  

இந்த சேவையை 1972 ஆம் ஆண்டு ஆரம்பித்தேன். நான் குப்பை சேகரிப்பதற்காக சென்றபோது  பெண் குழந்தையொன்று குப்பைத் தொட்டிக்குள் எறியப்பட்டு கிடந்ததது. அக்குழந்தையை எடுத்துச் செல்லாவிட்டால் நிச்சயம் இறந்துபோயிருக்கும். அதனால் அக்குழந்தையை எடுத்துவந்தேன்.

அவள் ஒரு திடகாத்திரமான பெண்ணாக வளர்ச்சியடைந்ததை பார்க்க எமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் உண்மையான அன்புடன் அந்தக் குழந்தையை வளர்த்தெடுத்தேன் என்பதை அப்போதே உணர்ந்தேன்' எனவும் அவர் கூறியுள்ளார்.





You May Also Like

  Comments - 0

  • m.m.athhardickwella Thursday, 02 August 2012 04:10 AM

    உன்மையான தாய்பாசம்.உலக அதிசயம்

    Reply : 0       0

    riyas Friday, 03 August 2012 03:36 AM

    அன்பு தாயே

    Reply : 0       0

    G.GIDEON Saturday, 25 August 2012 06:05 AM

    இந்த தாய் இருப்பதால் இந்த உலகில் யாரும் அனாதை இல்லை.

    Reply : 0       0

    Mohamed Mihlar Tuesday, 28 August 2012 06:27 AM

    உன்மையான தாய்ப்பாசம் அல்லாஹ் இவருக்கு நேர் வழயைக் காட்டட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X