2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

7 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்

George   / 2016 ஜூன் 14 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டின் தாராபுரம் பகுதியில், 7 பேரை ஏமாற்றி திருமணம் செய்த குற்றச்சாட்டில் இளம் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கோப்பனகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் செல்வகுமார் (32). இவருக்கும் பல்லடம் அறிவொளி நகரை சேர்ந்த மாரியம்மாள் என்கிற பவித்ராவுக்கும் (25) கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த மே மாதம் பவித்ரா, நகை மற்றும் பணத்துடன் மாயமானார். இதுகுறித்து செல்வகுமார் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பவித்ரா பல்வேறு பெயர்களில் உடுமலையைச் சேர்ந்த கர்ணன், பழனியைச் சேர்ந்த செந்தில், செல்வகுமார் உள்பட 7 பேரை திருமணம் செய்து நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து உடுமலை அருகே பதுங்கி இருந்த பவித்ராவை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X