2025 மே 14, புதன்கிழமை

15,000 விண்ணப்பங்களை அனுப்பியும் தொழில் கிடைக்காத முதுமாணி பட்டதாரி

Kogilavani   / 2012 மே 24 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த 10 வருடகாலத்தில் சுமார் 15,000 தொழில்களுக்கு விண்ணப்பித்தும் தொழில் எதுவும் கிடைக்காத முதுமாணி பாட்டதாரியொருவர்  விரக்தியடைந்து, 'என்னைத் தேர்வு செய்யுங்கள்' என எழுதப்பட்ட மட்டையொன்றை கழுத்தில் தொங்கவிட்ட நிலையில் வீதியில் திரிந்த சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் பகுதியை சேர்ந்த ரொபின் நோர்ட்ன் என்பவரே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இவர் வரலாற்றுத்துறையில்  முதுமாணி பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  முன்னர் தபால்துறையில் பணியாற்றினார். பின்னர் 2002 ஆம் ஆண்டுவரை பாதை பராமரிப்பு தொழில்நுட்பவியலாளராக பணியாற்றினார். ஆனால், அதன்பின் இவர் நிரந்தரமாக எந்த தொழில் வாய்ப்பையும் பெற்றுக்கொள்ளவில்லை.

கடந்த 10 வருடகாலத்தில் அவர் சுமார் 15,000 வேலைவாய்ப்பு விளம்பரங்களைப் பார்த்து விண்ணப்பங்களை அனுப்பினாராம். ஆனாலும் தொழில் கிடைக்கவில்லை.

அதனால் தற்போது அவர் 'என்னை தேர்வு செய்யுங்கள்' என்ற சுலோகம் எழுதப்பட்ட அட்டையை கழுத்தில் தொங்கவிட்ட நிலையில் வீதியில் நடப்பதற்கு ஆரம்பித்துள்ளார்.

இது குறித்து நோர்டன் தெரிவிக்கையில், 'நான் கடந்த பத்து வருடங்களாக வாராந்தம் சராசரியாக 25 தொழில்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வந்தேன். சில சமயங்களில் ஒரு வாரத்திற்கு 50 விண்ணப்பங்களையும் அனுப்பியதுண்டு. இவற்றுக்கு மிகவும் அறிதாகவே பதில்கள் கிடைத்தன. எனது மின்னஞ்சல் கிடைத்தது ஆனால் நான் தேர்வு செய்யப்படவில்லை என்றுகூட அறிவிப்பதில்லை' என்றார்.

அவ்வப்போது, துப்புரவாக்கல், தோட்டவேலை, நிர்மாணவேலைகள் போன்றவை பகுதிநேர தொழிலாக அவருக்கு கிடைத்தனவாம்.
ஆனால், தான் முழு நேர வேலையை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .