2025 மே 15, வியாழக்கிழமை

2,000க்கு மேல் உள்ளாடைகளைத் திருடிய திருடன்

Gavitha   / 2014 டிசெம்பர் 24 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளாடை திருடர்களை அதிகமாக கொண்ட நாடாக சீனா விளங்குகிறது எனலாம். ஏனெனில் சீனாவில் உள்ளாடை திருடர்கள் தொடர்பிலான செய்தி தொடர்ந்து வெளிவந்த வண்ணமே உள்ளது.


அந்தவகையில் மற்றுமொரு உள்ளாடைத் திருடன் தொடர்பிலான செய்தி தற்போது வெளியாகியுள்ளது.


மேற்படிதிருடன்,சுமார் 2,000க்கும் அதிகமான பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அவருடைய வீட்டின் கூரைசீலிங்கில் வைத்துள்ளார்.


இதன் காரணமாக இவருடைய கூரைசீலிங் பாரம் தாங்காமல் உடைந்து விழுந்துள்ளது.


சீனாவிலுள்ள யூலின் எனும் நகரத்தைச் சேர்ந்த இத்திருடன், தினமும் பெண்களின் உள்ளாடைகளை திருடி அவரது வீட்டின் கூரைசீலிங்கில் வைத்து வந்துள்ளார்.


அயலில் வசிக்கும் பெண்களின் உள்ளாடைகளேயை இவர் இவ்வாறு திருடியுள்ளார்.


இவர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இத்திருடனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .