Kogilavani / 2010 நவம்பர் 23 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவப்பெட்டி தயாரிப்பாளர்கள் தங்களது வியாபாரம் களைகட்ட வேண்டும் என்பதற்காக கொள்ளைக்கொள்ளும் மொடல் அழகிகளின் கவர்ச்சிப் படங்கள் கொண்ட கலண்டர்களை தயாரித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போலந்திலுள்ள மரணச்சடங்கு நடத்தும் நிறுவனமான லிண்டரினால் இக் கலண்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கவர்ச்சியான உள்ளாடைகளை அணிந்த மொடல்அழகிகள் சவப்பெட்டிக்கு அருகில் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் காட்சிகளை சித்தரிக்கும் விதமாக தோன்றுவதுபோல் இக்கலண்டரின் புகைப்படங்கள் உள்ளன.
கருப்பு மற்றம் வெள்ளை நிறத்திலான அட்டைப்படத்தில், ஒரு பெண் உள்ளாடைகள் மாத்திரம் அணிந்தவாறும் துப்பாக்கியை ஏந்தியவாறு காணப்படுகிறார்.
அதேவேளை பின்பக்க அட்டையில் ஜோடியொன்று சவப்பெட்டியில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் காட்சி உள்ளது.
12 மாதங்களுக்குமான பக்கங்களிலும் பல்வேறு பாலியல் காட்சிகள் கொண்ட படங்கள் உள்ளன.
இந்நிறுவனத்தின் ஊடக பேச்சாளர் பெட்ரிக் லிண்டர் கருத்துத் தெரிவிக்கையில், இக்கலண்டரானது சற்று ஹொலிவூட் உணர்வை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.
பிரித்தானியா, ஜேர்மன், போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொடல் அழகிகள் இப்படங்களில் தோன்றுகின்றனர்.
ஆனால், கத்தோலிக்க நாடான போலந்தில் இக்கலண்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'இது ரசனையற்ற நடவடிக்கை. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மரணம் என்பது செக்ஸியானது அல்ல' என்று தலைநகர் வார்ஸோவிலுள்ள தேவாலய பேச்சாளரான பாதிரியார் டடேயுஸ் ரிபினிக் விமர்சித்துள்ளார்.
எனினும் லிண்டர் நிறுவனம் இத்தகைய கலண்டரை வெளியிடுவது இது முதல் முறை அல்ல. கடந்த வருடம் மொடல் அழகிகளின் சவப்பெட்டியுடனான அறை நிர்வானப் படங்களை கொண்ட கலண்டர்கள் வெளியிடப்பட்டபோதும் சர்ச்சை ஏற்பட்டது.
'கடந்த வருடம் 3000 கலண்டர்கள் விற்கப்பட்டன. இவ்வருடம் அதைவிட அதிகமாக விற்கும் என நாங்கள் நம்புகின்றோம்' என பட்ரிக் லிண்டர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .