Kogilavani / 2010 நவம்பர் 28 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனில் 5 பிள்ளைகளின் தாயொருவர் தனக்கு அரசாங்க வீடு கிடைக்கும் வரை தொடர்ந்து பிள்ளைகளை பிரசவிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
லாவினி சமா என்ற 27 வயதான பெண்ணே இவ்வாறு அறிவித்துள்ளார்.
இவர் தற்போது ஆறாவது தடவையாக கர்ப்பம் தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரின் கடைசி 3 குழந்தைகளும் சமூக நலத்துறை திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் பிறக்கவுள்ள குழந்தையையும் அத்திணைக்களம் பொறுப்பேற்க வேண்டுமென லாவினி எதிர்பார்க்கிறார்.
கடந்த 2002 ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண் குழந்தைகளையும் இரண்டு பெண்குழந்தைகளையும் அவர் பிரசவித்துள்ளார்.
இக்குழந்தைகள் மூன்றும் வெவ்வேறு ஆண்களுக்கு பிறந்த குழந்தைகளாகும். அதில் ஒரு குழந்தைக்கு யார் தந்தை என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
லாவினி ஒருபோதும் வேலைக்குச் சென்றதில்லை. ஆனால் அவர் மாதாந்தம் 600 ஸ்ரேலிங் பவுண்களை உதவித் தொகை பெற்று வருகிறார்.
குழந்தைக்குத் தாயாக இருப்பது தனது உரிமையாகும் எனத் தெரிவித்துள்ள சமா, தனது இறுதி இலக்கு நல்ல தாயாக இருப்பதேயாகும் எனக்கூறியுள்ளார்.
எனினும் நகரசபை தொடர்மாடிக் குடியிருப்பில் தன்னை குடியமர்த்தும் வரை தொடர்ந்து பிள்ளைகளை பிரசவிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை பிரிட்டனின் சமூக நலன்புரித் திட்டங்கள் ஏன் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்கு இது ஓர் உதாரணமாகும் என அந்நாட்டு வரியிறுப்பாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
Aathi Thursday, 02 December 2010 09:09 PM
very goooooood job
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .