2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

செக்ஸ் விளம்பரங்களுக்கு ஆர்ஜென்டீனா ஜனாதிபதி தடை

Kogilavani   / 2011 ஜூலை 10 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆர்ஜென்டீனாவில் பாலியல் தொழிலாளர்களால் ஊடகங்களில் வெளியிடப்படும் பாலியல் சேவை தொடர்பான விளம்பரங்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி தடைவிதித்துள்ளார்.

ஆர்ஜென்டீனா ஜனாதிபதி கிரிஸ்டினா பெர்னாண்டஸ் டி கேர்ச்னர், இது குறித்து தெரிவிக்கையில், 'பெண்களை பாதுகாப்பதற்கான திட்டத்தில் முன்னோக்கிய ஒரு மாபெரும் நடவடிக்கை இது' எனக் கூறியுள்ளார்.

அதேவேளை, இணையத்தளங்களில் பாலியல் சேவைகள் தொடர்பான விளம்பரங்களை தடைசெய்வதற்கான திட்டம் குறித்து நீதியமைச்சர் ஜுலியோ அலாக் அறிவித்துள்ளார்.

இவ் அறிவித்தல்கள்  குறித்து பலர் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர். ஏனெனில் ஆர்ஜென்டீனாவில் உள்நாட்டில் விபசாரமானது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் புவனர்ஸ் அயர்ஸிலுள்ள பூங்காக்களில் பாலியல் தொழிலாளர்கள் பகிரங்கமாகவே தம்மை வாடிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

இத்தடையை ஆர்ஜென்டீனாவில் அதிகம் விற்பனையாகும் கிளேரின் எனும் பத்திரிகைக்கு எதிரான ஜனாதிபதியின் நடவடிக்கையாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இப்பத்திரிகையில் தினமும் சுமார் 200 பாலியல் விளம்பரங்கள் பிரசுரிக்கப்படுகின்றன.

இப்பத்திரிகை ஆர்ஜென்டீனா ஜனாதிபதியின் நிர்வாகத்திலுள்ள ஊழல்கள் குறித்து கவனம் செலுத்துகின்றது. ஜனாதிபதி கேர்ச்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மீண்டும் தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய விளம்பரங்கள் மூலம் சில பத்திரிகைகள் பெரும் லாபத்தை சம்பாதிப்பது இத்தடையின் மூலம் நிறுத்தப்படும் என ஜனாதிபதி கேர்ச்சனர் கூறியுள்ளார்.

இந்தத் தடை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என ஆர்ஜென்டீனா வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். 'இது சட்டவிரோதமானது. ஏனெனில் இது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை பாதிக்கின்றது' என சட்டத்தரணி மார்டின் கர்ரான்ஸா டொரஸ் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0

  • people of god Monday, 11 July 2011 04:22 PM

    அனைத்துக்கும் முடிவு உண்டு .

    Reply : 0       0

    riyas Monday, 11 July 2011 08:13 PM

    வரவேற்க்கதக்கது.

    Reply : 0       0

    Anban Monday, 11 July 2011 11:12 PM

    வாழ்க வளமுடன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X