Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 03 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமானமொன்றில் கிடந்த அழுக்கு டயப்பர் துணியினால் எழுந்த துர்வாடை காரணமாக அவ்விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
டார்வின் நகரிலிருந்து பிரிஸ்பேன் நகருக்கு சென்றுகொண்டிருந்த குவான்டோஸ் விமானசேவையின் விமானமொன்றே அது தரையிறங்க வேண்டிய பிரிஸ்பேனிலிருந்து 1,152 மைல்கள் தூரத்திலுள்ள மௌன்ட் இஸா எனும் இடத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த துணியானது விமானத்தின் மலசலக் கூடத்தில் உள்ளே திணிக்கப்பட்டிருந்ததாக குவான்டோஸ் நிறுவனத்தின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துர்வாடை குறித்து பயணிகள் முறையிட்டதால் விமானத்தை தரையிறக்கத் தீமானிக்கப்பட்டது.
'துரதிஷ்டவசமாக குறித்த டயப்பரிலிருந்து துர்வாடை வீசத்தொடங்கிவிட்டது. அதனால் சீக்கிரம் தரையிறக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இது உண்மையில் எங்கள் அனைவரையும் தர்மசங்கடத்திற்குள் தள்ளியது' என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டபின் பாரந்தூக்கி வாகனங்கள் மூலம் விமானத்திலிருந்து பயணிகள் இறக்கப்பட்டனர். அதன்பின் வேறொரு விமானத்தில் அவர்கள் பிரிஸ்பேன் நோக்கி பயணமாகினர்.
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் உரிய சோதனைகளின்பின் பயணிகளின் பொதிகளுடன் பிரிஸ்பேனை சென்றடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .