2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி

Kogilavani   / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர், ஒவ்வாமைக் காரணமாக தனது காதலுருடன் முத்தம் பரிமாறப் முடியாதுள்ளதுடன் தனது காதலுருடன் நெருங்கி உறவாட முடியாமல் அவஸ்தைகளை எதிர்நோக்கிய வண்ணமுள்ளார்.

ரச்செல் பிரின்ஸ் என்ற 24 வயதான யுவதியே இவ்வாறு ஒவ்வாமை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த யுவதி ஒருவகை ஒவ்வாமை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரின் தோல்மீது தண்ணீரோ, இரத்தமோ, எச்சிலோ பட்டால் எரிச்சலூட்டும் தழும்புகள் ஏற்பட்டுவிடும்.

இதனால் இப்பெண்ணினால், நீண்ட நேர குளியல், நீச்சலில் ஈடுபடவோ, குளிரான நீரை அருந்தவோ, முடியாது. குளிரான நீரை அருந்தினால் அவரது தொண்டை வீங்கிவடும்.

எச்சில்பட்டால் தோலில் தழும்புகள் ஏற்படும் என்பதால் காதலர் தினத்தில்கூட அவர் தனது காதலரிடமிருந்து முத்தத்தைப் பெற முடியாதுள்ளார்.

இது குறித்து ரச்செல் பிரின்ஸ் தெரிவிக்கையில், 'இது என்னை மிகவும் மன உளைச்சலுக்குள் தள்ளவிட்டது. ஏனெனில் நான் நிச்சயமாக எனது காதலுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். ஆனால் அவர் எனக்கு கன்னத்தில் தவறி முத்தம் கொடுத்துவிட்டால் ஒவ்வாமை ஏற்படுவதற்கு முன் நான் அதனை துடைத்துவிட வேண்டும்.

இவர் லீ வோர்விக் எனும் தனது 26 வயது காதலருடன் வசித்து வருகின்றார்.

ஆனால் லீ, மனம்தளராமல் காதலர் தினத்தில் சிறிய பரிசுகளை வழங்கி உறவை வலுப்படுத்திக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

'நான் என்றாவது ஒரு நாள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன். ஆனால் இது குறித்து நாம் நிதானமாக சிந்திக்க வேண்டியுள்ளது. ஏனெனில்  பாத்திரங்களை, ஆடைகளை சுத்தம் செய்ய என்னால் முடியாது' என ரச்செல் கூறியுள்ளார்.

ரச்செலுக்கு உள்ளதைப் போன்ற ஒவ்வாமை நிலை உலகில் 35 பேருக்கு உள்ளதாக அறியப்பட்டுள்ளது.

தனக்கு 12 வயதான போது முதன்முதலில் இந்த ஒவ்வாமையை கண்டறிந்ததாகவும் மருத்துவர்கள் உட்பட பலர் இதனை நம்பவில்லை எனவும் ரச்செல் கூறுகிறார்.

'தண்ணீர் எனக்கு அலர்ஜியாக முடியாது என மருத்துவர்கள் சிலர் கூறினர். மக்கள் பலர் இதனை நம்ப மாட்டார்கள். இது குறித்து நான் கூறும்போது எப்படி ஆடைகளை கழுவுகிறேன். எப்படி குளிக்கிறேன் என்றெல்லாம் பல கேள்விகளை அவர்கள் கேட்பார்கள்.

அதற்கு பதில் சுலபமானது. நான் ஓரிரு நிமிடங்கள் மாத்திரம் குளிப்பேன்.  அப்போதும் எரிவும் மிகுந்த வேதனையும் ஏற்படும் என்பதால் நான் உடன் குளியளிலிருந்து வெளியேறிவிடுவேன்.

எங்கு போனாலும் நான் குடையொன்றை கொண்டுசெல்வேன். எனது வியர்வை, கண்ணீர், எனது சொந்த இரத்தம் கூட எனக்கு அலர்ஜியானது என்பதை நான் அறிவேன்.

பழச்சாறுகள் குடிப்பது ஓரளவு பரவாயில்லை. தண்ணீர் குடிக்கும்போது பெரும் அசௌகரியமாக இருக்கும்' என அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0

  • செம்பகம் Wednesday, 15 February 2012 04:15 PM

    என்ன கண்ராவி ஐயா கண்ராவி? எங்கய்யா போகுது உலகம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .