Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2012 பெப்ரவரி 16 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிறந்ததின வைபவத்தின்போது தனது பிள்ளைகளான சிறார்களுக்கு தற்செலயாக ஆபாசப்படங்களை வீடியோவை காண்பித்த நபரொருவர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி நபர் வாடகைக்கு வாங்கிய இறுவெட்டினை தனது மடிக்கணினியில் உட்புகுத்தியுள்ளார். அதன்பின் அந்த வீடியோவை புரொஜ்டர் மூலம் தனது பிள்ளைகளுக்கு காண்பிக்க முயற்சித்தபோது திரையில் ஆபாசப்படங்கள் தோன்றியுள்ளது.
இறுவெட்டில் யாரேனும் மாற்றம் செய்திருக்கலாம் என பொலிஸாரிடம் குறித்த நபர் முறைப்பாடு செய்தார்.
ஆனால், பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டபின், அவ்வாறான முறைகேடுகள் ஏதும் இடம்பெறவில்லையென தெரிவித்துள்ளனர்.
மேற்படி ஆபாசப் படங்கள் ஏற்கனவே குறித்த மடிக்கணினியில் இருந்திருக்க வேண்டுமென்றும் மேற்படி நபர் தவறான பொத்தான்களை அழுத்தியிதனால் மேற்படி ஆபாசப்படம் திரையில் தோன்றியிருக்கலாமென பொலிஸார் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் பெரும்பாலும் ஒரு விபத்தாக இடம்பெற்றிருக்கலாமென்று கருதி, பொலிஸார் மேற்படி நபருக்கு எதிராக வழக்குத் தொடுக்கவில்லை.
4 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
26 minute ago