2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பறந்துகொண்டிருந்த விமானத்திற்குள் பாம்பை கண்டு அதிர்ந்த விமானி

Kogilavani   / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


பறந்துகொண்டிருந்த விமானத்தில் தனது ஆசனத்திற்கு முன்னால் திடீரென பாம்பு ஊர்வதை விமானி  அவதானித்து விமானத்தை அவசரமாக தரையிறக்கிய சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

பிரேடன் பிலனெர்ஹசெட் என்ற விமானியே இவ்வாறான திகைக்கவைக்கும் அனுபவத்தை எதிர்கொண்டார்.

எமது விமானத்தில் பாம்பொன்று உள்ளது என அவசர அறிவிப்பொன்றை விடுத்த அவர், டார்வின் நகரில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.

'விமானத்தை தரையிறங்கிக்கொண்டிருக்கும்போதே பாம்பு எனது கால்களின் கீழ் ஊர்ந்துசெல்லத் தொடங்கியது. அது உண்மையிலேயே அச்சத்தை ஏற்படுத்தியது' என அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது, 2006 ஆம் ஆண்டு வெளிவந்த விமானத்திற்குள் பாம்புகள் ஊர்ந்துசெல்லும் காட்சிகளை கொண்ட 'ஸ்னேஸ் ஒன் ஏ பிளேன்' எனும் திரைப்படத்தை நினைவுபடுத்தியுள்ளது.

மேற்படி விமானத்தை தரையிறக்குவதற்கு முன்னர் பாம்பு கையாள்பவர்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அதிகாரிகளிடம் விமானி கோரிக்கை விடுத்தார்.

பாம்புகளை நான் திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் விமானத்திற்குள் அவற்றை ஒருபோதும்  பார்த்ததில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • meenavan Saturday, 07 April 2012 10:54 PM

    மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்தான் ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .