2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

உலக இணைய போக்குவரத்தில் மூன்றிலொரு பங்கை வகிக்கும் ஆபாசத் தளங்கள்

Kogilavani   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில்  இணைய போக்குவரத்தில் 30 வீதமானவை ஆபாச இணையத்தளங்கள் தொடர்பானவை என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.  மிகப்பெரிய ஆபாச இணையத்தளத்தை மாதமொன்றிற்கு 350 மில்லியன் பேர் பார்வையிடுவதாகவும் மாதாந்தம் 4 பில்லியனிற்கும் தகவல்கள் அதில் பார்வையிடுவதாகவும்  மேற்படி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து.

உலகின் மிகப் பிரபலமான இணையத்தளங்களான கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகியன மாத்திரமே மேற்படி இணையத்தளத்தின்  பார்வையாளர்களைவிட அதிக பார்வையாளர்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் ஆபாச இணையத்தள பார்வையாளர்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் கூகுள் டபிள்கிளிக் எட் பிளேனர் முறைமைக்கூடாக பெறப்பட்டுள்ளன.

இவ்வருட முற்பகுதியில் பிரபல ஆபாச இணையத்தளமொன்றுக்கான 6400 கடவுச்சொற்கள் இணைய ஊடுருவல்காரர்களினால் திருடப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X