2025 மே 14, புதன்கிழமை

விமான நிலைய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாணமாக நின்ற பயணி

Kogilavani   / 2012 ஏப்ரல் 20 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பயணியொருவர் விமான நிலையத்தில் நிர்வாணக் கோலத்துடன் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று போர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

ஜோன் பெர்னான் என்பவரே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுப்பட்டுள்ளார். தன்னை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்ய முற்படுகையில் தன்னை கைதுசெய்வதாக உணர்ந்ததாக அவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தின் சோதனை பகுதிக்கு செல்லும்வழியில் மேற்படி 50 வயது நபர்  முற்றுமுழுதுமாக நிர்வாணக் கோலத்தில் காணப்பட்டாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த மனிதரை ஆடைகளை மீண்டும் அணிந்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

முறையற்ற விதத்தில் தொடர்பு கொண்டது மற்றும் அநாகரிகமாக நடந்துகொண்டமை போன்ற குற்றச்சாட்டுக்களில் மேற்படி நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்தவாரம் அமெரிக்காவின் டென்வர் நகர விமான நிலையத்தில் பெண்ணொருவர் காரணம் எதுவும் கூறாமல் நிர்வாணக்கோலத்துடன் நின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .