2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மரத்தின் உச்சியில் முட்டை வடிவான வீடு

Kogilavani   / 2012 ஏப்ரல் 24 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


கனடாவிலுள்ள நபரொருவர் மரமொன்றின் மீது முட்டை வடிவிலான வீடொன்றை உருவாக்கி அதில் வசித்து வருகின்றார்.

கணினி தொழில்நுட்பவியலாளரான ஜோயல் ஹெலன் எனும் மேற்படி நபர் தச்சராக மாறி மேற்படி வீட்டினை நிர்மாணித்துள்ளார்.

அவர் வீட்டின் ஆயுட்காலம் மற்றும் ஸ்திரத்தன்மை போன்றவற்றுக்காக பல்வேறு மாதிரிகளை வடிவமைத்து பரிசீலித்து பின்னர் இவ்வீட்டினை நிர்மாணித்துள்ளார்.

இவ்வீட்டினை நிர்மாணிப்பதற்கு முன் பொருத்தமான மரமொன்றை கண்டறிவதற்காக ஒரு மாத காலத்தை செலவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவர் நிர்மாணித்துள்ள இவ்வீட்டில் சமயலறை உட்பட அனைத்து வசதிகளும் காணப்படுகின்றன. இவ்விட்டிற்குச் செல்வதற்கான பாதையும் பலகையினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.













  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .