2025 மே 14, புதன்கிழமை

ஊழியர்களுக்கு தவறுதலாக பிரியாவிடை மின்னஞ்சல் அனுப்பிய நிறுவனம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனிலுள்ள  நிறுவனமொன்றில் தொழில்புரியும் 1,300 ஊழியர்களுக்கும் தவறுதலாக பணிநீக்கத்திற்கான அறிவித்தல் அனுப்பப்பட்ட சம்பவம்; அண்மையில் இடம்பெற்றுள்ளது.

அந்நிறுவனத்தின் மனிதவள திணைக்களத்தினால் ஒவ்வொருவருக்கும் மின்னஞ்சிலினூடாக அனுப்பி வைக்கப்பட்டதாக பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.

குறித்த தினத்தில், அந்நிறுவனத்திலிருந்து விலகிச் செல்லும் ஊழியர் ஒருவருக்கு மாத்திரம் அக்கடிதம் அனுப்பப்படவிருந்தது. ஆனால் தவறுதலாக அக்கடிதம் அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டது.

இது விலகிச்செல்லும் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் பொருட்களை மீள ஒப்படைத்தல் முதலான விடயங்கள் தொடர்பாக அனுப்பப்படும் கடிதமாகும்.

'நான் இந்த சந்தர்ப்பத்தை உங்களுக்கு நன்றிக் கூறுவதற்கு பயன்படுத்திக்கொள்கிறேன். உங்களது எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு எனது வாழ்த்துக்கள்' எனவும் மேற்படி மின்னஞ்சல் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் மேற்படி மின்னஞ்சல் அனுப்பபட்டு ஒரு சில விநாடிகளில் குறித்த நிறுவனத்தின் தலைமையதிகாரிகள் நடந்ததை உணர்ந்ததுடன் மேற்படி மின்னஞ்சலை வாபஸ் பெற்றனர்.

அதன்பின், தவறுதலாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு மன்னிப்புக்கோரி மீண்டும் ஒரு மின்னஞ்சல் ஊழியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவிக்கையில் 'இந்நிறுவனத்திலிருந்து விலகிச்செல்லும் ஊழியர் ஒருவருக்கான கடிதம் அது. ஆனால்  தவறுதலாக அது இந்நிறுவனத்தின் உலகெங்குமுள்ள ஊழியர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுவிட்டது.

அக்கடிதத்தை வாசித்த எவரும் அது தவறாக அனுப்பப்பட்டுள்ளது என்பதற்கு அப்பால் வேறு எதையும் எண்ணியிருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .