2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த பாரிய கரடி

Kogilavani   / 2012 ஏப்ரல் 29 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழக வளாகமொன்றுக்குள் புகுந்து மரமொன்றில் ஏறிக்கொண்ட  200 இறாத்தல் நிறையுடைய கரடியை பலர் இணைந்து பல்வேறு முயற்சிகளின் பின் பிடித்து காட்டில் விட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கொலரடா பல்கலைக்கழத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இக்கரடியை பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் திரண்டனர்.

அங்கு விரைந்த வனவிலங்கு ஊழியர்கள் கரடியை பிடித்து காட்டில் விடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

மரத்தில் ஏறியிருந்த இக்கரடியை அம்பெய்து மயக்கமடையச் செய்தனர். சில நிமிடங்களின் பின் குறித்த கரடியானது 15அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தது. பல்கலைக்கழக மற்றும் பொலிஸ் திணைக்கள அலுவலர்கள் தரையில் மெத்தையொன்றை விரித்து மிகவும் குறித்த கரடியினை பிடித்துள்ளனர்.

அக்கரடி சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அம்மரத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X