2025 மே 14, புதன்கிழமை

மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்வதற்காக புற்றுநோய் எனக்கூறி நிதி திரட்டிய பெண்

Kogilavani   / 2012 மே 06 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்பகங்களை பெரிதாக்கிக்கொள்ளும் சத்திரச்சிகிச்சையை மேற்கொள்வதற்காக, தனக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக பொய் கூறி நிதி திரட்டிய பெண்ணொருவருவர் மோசடி மற்றும் திருட்டுக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெமி லியென் டொலர் எனும் 27 வயதுடைய மேற்படி  பெண், தான் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சத்திரசிகிச்சையின் மூலம் இரு மார்பகங்கங்களையும் அகற்ற வேண்டுமென்றும்  தான் பணியாற்றிய நிறுவன உயர் அதிகாரியிடம் கூறியுள்ளார். இதே விடயத்தை தனது தாத்தா பாட்டியிடமும் கூறியுள்ளதாக  பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பெண்ணுக்கு  உதவுவதற்காக நலநிதிய அமைப்பொன்று 8000 இற்கும் மேற்பட்ட டொலர்களை திரட்டி கடந்த டிசெம்பர் மாதம் அவரிடம் கையளித்துள்ளது.

ஆனால், அவருக்கு மார்பக புற்றுநோய் இல்லையென்றும் அவர் மார்பகத்தை பெரிதாக்குவதற்கான சத்திர சிகிச்சை செய்துக்கொண்டுள்ளார் என்றும் பொலிஸாரினால் பெறப்பட்ட மருத்துவ அறிக்கையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பெண்ணுக்கு இலவசமாக மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையை செய்வதற்கு மருத்துவர் ஒருவர் முன்வந்தார்.

ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்த அப்பெண் மறுத்ததையடுத்தே அவரது உண்மையான கதை வெளிவரத் தொடங்கியது என பொலிஸ் சார்ஜன்ட் அந்தனி லண்டாட்டோ தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .