2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கேபிள் கார்களுக்குள் பாலியல் செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை

Kogilavani   / 2012 மே 07 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில்  கேபிள் கார்களுக்குள் இடம்பெறும் பாலியல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு கேபிள்கார் இயக்குநர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்தரத்தில் பயணிக்கும் கேபிள் கார்களுக்குள் இளம்ஜோடிகள் பாலியல்  சல்லாபத்தில் ஈடுபடுவதை தடைசெய்ய வேண்டுமென உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற அழகிய மலைத்தொடரில் இயக்கப்படும் கேபிள் கார்களுக்குள் பாலியல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் இதற்கு தடைவிதித்துள்ளனரென சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையடுத்து கேபிள் கார்களுக்குள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதென அறிவுறுத்தும் விளம்பர பலகைகள் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .