2025 மே 14, புதன்கிழமை

பாலத்தின் மீது நிர்வாணமாக சைக்கிளோட்டியவர் கைது

Kogilavani   / 2012 மே 14 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலமொன்றின் மீது நிர்வாணக்கோலத்தில் சைக்கிளொன்றை செலுத்திய நபரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

டெக்சாஸ் மாநிலத்தின் ஹஸ்டன் நகருக்கு அருகில் கெமாஹ் பிரதேச   பொலிஸாருக்கு பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோஸப் பார்லே என்ற 45 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் தனது ஆடைகளை களைந்த நிலையில் பாலத்தின் மீது ஒற்றை சக்கரம் கொண்ட சைக்கிளை செலுத்திய நிலையில் காணப்பட்டுள்ளார்.

தனக்கு அப்பயணம் பிடித்திருப்பதாக உணர்ந்ததாக அந்நபர் தெரிவித்துள்ளார் என கெமாஹ் பிரதம பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொது இடத்தில் அநாகரிகமான முறையில் தோன்றியதாக  ஜோசப் பார்லே  மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .