2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

காதலியின் தாக்குதலிலிருந்து தப்ப முயன்று குப்பைத் தொட்டியில் விழுந்த நபர்

Kogilavani   / 2012 மே 18 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலியின் தாக்குதலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக 8 ஆவது மாடியிலுள்ள வீட்டின் குப்பைத் தொட்டிக்குள் மறைந்து கொள்ள முயன்ற காதலன் குப்பை அகற்றும் குழாய் வழியாக விழுந்து 3ஆவது மாடியிலுள்ள குப்பைத்தொட்டிக்குள் மாட்டிக்கொண்ட சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து தனது காதலி தன்னை தாக்குவாரென்று பயந்த 32 வயதான மேற்படி நபர் ஓடிச்சென்று தான் குடியிருக்கும் வீட்டின் குப்பை தொட்டிக்குள் மறைந்துக்கொண்டுள்ளார்.

எனினும் அவர் குப்பை அகற்றும் குழாய் வழியாக விழுந்து 3 ஆவது மாடியுள்ள பகுதியில் அந்தரத்தில் சிக்கினார்.

பின்னர் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் அவர் கீழிறக்கப்பட்டார்.

மேற்படி நபரின் பெயருக்கு களங்கம் ஏற்படுமென்பதற்காக குறித்த நபரின் பெயரை வெளியிட பொலிஸார்  மறுத்துவிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X