2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சிறுவனின் நுரையீரலிலிருந்து உயிருடன் அகற்றப்பட்ட மீன்

Kogilavani   / 2012 மே 30 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 வயதான சிறுவன் ஒருவனின் நுரையீரலில் இருந்து 9 சென்றிமீற்றர் நீளமுடைய மீனை உயிருடன் வைத்தியர்கள் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றியுள்ள விசித்திர சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

அனில் பெர்லா என்ற சிறுவனின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு உயிருடன் மீன அகற்றப்பட்டுள்ளது.

மேற்படி சிறுவன் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள ஆறொன்றில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த போது மீன் ஒன்றை அச்சிறுவன் உயிருடன் விழுங்கியதாகவும் அம்மீன் சிறுவனின் இடது புற நுரையீரல் பகுதிக்குள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியிலுள்ள சிறுவர்கள் உயிருள்ள மீனை அடிக்கடி விழுங்குவதாகவும் ஆனால், ஒரு மீன் அச்சிறுவனின் சுவாசக்குழாய் வழியாக இடதுநுரையீரலுக்குள் சென்றுள்ளதாகவும் டைம்ஸ் ஒவ் இண்டியா பத்திரிகை தெரிவித்துள்ளது.

அதன்பின் மேற்படி சிறுவனுக்கு சுவாச சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன் அவனது இரத்ததில் ஒட்சிசனின் அளவு அபாயகரமாக குறைவடைந்துள்ளமை சோதனைகளின் மூலம் அறியப்பட்டது.

அதையடுத்து வைத்தியர்கள் உடனடியாக 45 நிமிட நேர சத்திரிசிகிச்சையை மேற்கொண்டு மேற்படி சிறுவனின் உடலிருந்து மீனை அகற்றியுள்ளனர்.

20 வருட கால தனது வைத்தியதுறை அனுபவத்தில் இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை எதிர்கொள்வது இதுவே முதல்தடலையென டாக்டர் பிரமோத் ஜாவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .