2025 மே 14, புதன்கிழமை

எழுந்து நடக்கமாட்டார் எனக் கூறப்பட்ட நபர் உடற்கட்டுப் போட்டிகளில் பங்குபற்றுகிறார்

Super User   / 2012 ஜூன் 01 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

விபத்தில் காயமடைந்தபின் மீண்டும் எழுந்து நடக்கமாட்டார் என மருத்துவர்களால் கூறப்பட்ட அவுஸ்திரேலியர் ஒருவபர் உடற்கட்டுப் போட்டியில் மீண்டும் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதான லீ ஷரெட், 10 வருடங்களுக்கு முன்னர் பயங்கர கார் விபத்தொன்றில் படுகாயமடைந்தார்.

இடுப்பு எலும்பு, முதுகெலும்பு உடைந்தால் 3 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், 6 மாதங்கள் சக்கர நாற்காலி மூலமே நடமாடினார். ஒரு வருடத்தின்பின் ஊன்றுகோலின் உதவியுடன் நடக்க ஆரம்பித்தார். அக்காலத்தில் அவரின் எடை 120 கிலோவாக அதிகரித்திருந்தது.

அடுத்த சில வருடங்களில் மெதுவாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த அவர், கடந்த வருடம் ஜனவரி மாதம் தீவிர உடற்கட்டுப் பயிற்சிகளை பெற ஆரம்பித்தார். ' கட்டுமஸ்தான உடலை பெறுவதற்காக எனது இலக்குகளை சிறிது சிறிதாக பிரித்துக்கொண்டேன்' என அவர் கூறுகிறார்.

போட்டியில் வெல்வதற்காக மாத்திரமல்லாமல், உடற்பயிற்சி செய்வதில் தான் குதூகலத்தை  அனுபவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .