2025 மே 14, புதன்கிழமை

வெளிநாட்டு நபர்கள் எம்மை நிர்வாணமாக படம்பிடிக்கின்றனர்: சிறுமியர் இல்லத்து சிறுமிகள்

Super User   / 2012 ஜூன் 08 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தம்மை நிர்வாணமாக படம்பிடிப்பதாக  இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள சிறுமியர் இல்லத்தில் தங்கியிருக்கும் சிறுமிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாரத் விகாஸ் சாங் என்ற அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் நடத்தப்படும் மேற்படி சிறுமியர் இல்லமானது கடந்த மே மாதம் தேசிய சிறுவர் பராமரிப்பு ஆணைக்குழுவினால் சுற்றி வளைக்கப்பட்டது. இதன்போது இந்த இல்லத்திலிருந்து 10-15 வயதுக்குட்பட்ட 90 சிறுமிகளை ஆணைக்குழுவினர் மீட்டுள்ளனர்.

மேற்படி இல்லத்தின் உரிமையாளரான ஜஸ்வன்தி தேவி மீது, கடத்தல், சித்திரவதை, கொத்தடிமையாக சிறார்களை பயன்படுத்தியுள்ளமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மும்மையிலிருந்து வந்த வெளிநாட்டவர்களால்  தாம் நிர்வாணகோலத்தில் படம்பிடிக்கப்பட்டதாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினரிடம், அந்த இல்லத்தில் இருந்த சிறுமிகள் தெரிவித்துள்ளனனர்.

வெளிநாட்டவர்கள் வந்தால் ஜஸ்வந்தியின் மருமகன்  அறிவிப்பார். அவ்விருந்தினர்கள் நன்றாக உபசரிக்கப்படுவர் என அச்சிறுமிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

'இது மிகவும் கடுமையான குற்றச்சாட்டுக்களாக உள்ளன. எப்படியிருப்பினும் இவ்விடயம் தொடர்பில் தலையிடுவதற்கு எமக்கு தகுந்த ஆதாரங்கள் வேண்டும்' என பொலிஸ் அதிகாரியான டார்னா யாதவ் தெரிவித்துள்ளார்.

வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. மேல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இவ்விபரங்களை வெளியிட முடியும் என விசாரணைக் குழுவின் அதிகாரிகளில் ஒருவரான உத்;சவ் சிங் பெய்ன்ஸ் தெரிவித்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்துக்கு வெளியே சுயாதீன விசாரணைக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால்தான் உண்மைகள் வெளிவரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஹரியானா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .