2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஊழலை கட்டுப்படுத்த இரகசிய கமெரா, ஒலிப்பதிவு கருவி பொருத்தப்பட்ட பேனைகள்

Kogilavani   / 2012 ஜூன் 17 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவியாலிவில் சுங்க அதிகாரிகளிடையே ஊழலை கட்டுப்படுத்துவதற்காக அவர்கள், இரகசிய புகைப்படக் கருவி மற்றும் குரல் பதிவு கருவியை உள்ளடக்கிய விசேட பேனையை கடமை நேரத்தில் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இத்தீர்மானம் குறித்து சுங்கப்பிரிவு இயக்குநரான மர்லின் ஆர்டயா அறிவித்துள்ளார். அவருக்கு இப் பேனையொன்று வழங்கப்படவுள்ளது.

அவர்கள் இத்திணைக்களத்தில் ஒரு போதை எதிர்ப்பு பொறிமுறை போன்று பணியாற்றுவர் என  மர்லின் ஆர்டயா கூறினார்.

இக் குரல் பதிவு கருவியானது அனைத்து வேலை நேரங்களிலும் இயங்கிக்கொண்டிருக்கும் என மேற்படி அதிகாரி பி.பி.சி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். எழுந்தமான முறையில் சுங்க அதிகாரிகள் தெரிவு செயய்யப்பட்டு அவர்களின் கருவிகளில் பதிவுசெய்யப்பட்ட விடயங்கள் சோதனைக்குட்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

பொலிவியா சுங்க திணைக்களத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுங்க அதிகாரிகள் கடமையாற்றுகின்றனர். தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிகமான ஊழல் இடம்பெறும் துறைகளில் ஒன்றாக சுங்கத்துறை உள்ளது.

அந்நாட்டு சுங்கத்துறையான கனிம வளங்கள் உட்பட அனைத்து ஏற்றுமதி இறக்குமதி பொருட்களையும் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் கடத்தல்கள் காரணமாக அந்நாட்டு அரசாங்கத்துக்கு பல லட்சம் டொலர் இழப்பு ஏற்படுவதாக பொலிவிய பொருளாதார அமைச்சு  மதிப்பிட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .