2025 மே 14, புதன்கிழமை

நாய்களுக்கான கடல்சறுக்கல் போட்டியில் புதிய சாதனை

Kogilavani   / 2012 ஜூன் 18 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலிபோனியாவில் வருடந்தோறும் இடம்பெறும் நாய்களுக்கான கடல் சறுக்கல் போட்டியில் இம்முறை 17 நாய்கள் இணைந்து புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளன.

நூற்றுக்கணக்கான உள்ளூர் கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டட மேற்படி போட்டியில் 50 நாய்கள் கலந்துகொண்டன.

கலிபோர்னியா மாகாணத்தின் தென் பிராந்தியத்தில் அதிகமானவர்கள் ஒன்று கூடும் நிகழ்வாக நாய்களின் கடல் சறுக்கல் போட்டி காணப்படுகின்றது.

சிறிய நாய்கள், பெரிய நாய்கள், நாய் குழுக்களுக்கான போட்டிகள் என 3 வகையாக இப்போட்டி நடைபெற்றன.

நீண்ட அலைகளை கடத்தல், வித்தியாசமான வடிவில் அலைகளை கடத்தல் போன்றவற்றுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன.

இதில் ஒரே சறுக்கல் பலகையில் 17 நாய்கள் ஒன்றாக பயணித்து புதிய சாதனையை நிலைநாட்டின.

மைக்கல் உய் என்பவரின் அவுஸ்திரேலியன் கெல்பி மற்றும் அபி கேர்ள் ஆகிய நாய்கள் இவ்வருட சிறிய நாய்களுக்கான பிரிவில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X